கோப்பு படம். |
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் காட்டு யானைகளை தமிழக வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து ஆந்திர மற்றும் கர்நாடக மாநில வனபகுதிக்கு துரத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று யானைகள் மீண்டும் தமிழக வனபகுதிக்கு வந்து விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. இந்த காட்டுயானைகளை ஊருக்கு வராமல் இருக்க தமிழக வனத்துறையினர் துரத்தி சென்ற போது 3 யானைகளும் தனிதனியாக பிரிந்து சென்றது.
இதில் 2 தனியாக பிரிந்துள்ள யானைகள் விவசாய நிலங்களுக்கு வர கூடும் என்பதால் வனத்துறைகள் பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் எச்சரிக்கை இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஒற்றை காட்டுயானைகளால் பொதுமக்களுக்கு மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக