கணவன் மனைவிக்குள் தகராறு தட்டிக்கேட்ட மகன் மண்டை உடைப்பு தந்தை கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

கணவன் மனைவிக்குள் தகராறு தட்டிக்கேட்ட மகன் மண்டை உடைப்பு தந்தை கைது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி பஞ்சாயத்து கெத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் 50 வயது இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி வெங்கடம்மாள் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் அவருடைய ஒரு மகன் சரவணன் 30வயது தனியார் பேருந்து டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் அவருடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். 

தந்தை நாகராஜ் தினமும் குடித்துவிட்டு அவருடைய மனைவி வெங்கடம்மாளிடம் சண்டை இடுவது வழக்கம் இதேபோல் நேற்று இரவு 9. மணியளவில் நாகராஜ் குடித்துவிட்டு அவருடைய மனைவியிடம் சண்டை போட்டுள்ளார் தாயே அசிங்கமான வார்த்தையில் தந்தை திட்டியுள்ளார் இதை சரவணன் தாங்கமுடியாமல் தன் தந்தையிடம்  இப்படி அசிங்கமான வார்த்தையால் அம்மாவை ஏன் திட்டுகிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார் ஆத்திரமடைந்த நாகராஜ் அருகே உள்ள கட்டையை எடுத்துதன் மகன் மண்டை மீது அடித்துள்ளார் மகன் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கிக் கீழே விழுந்தார். 

அருகே உள்ளவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் மண்டையில் அடிபட்டு சரவணன் அரசு மருத்துவமனையில் தந்தை மீது புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் நாகராஜ் கைது செய்து தர்மபுரி கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad