தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கு நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந் நிலையில் திமுக வேட்பாளர்களுக்கான வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை கூட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சூடப்பட்டி டி.சுப்ரமணி தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர்கள் பி.கே.அன்பழகன், எம்.வீ.டி.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த ஆலோசனையின் போது தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் தமிழகத்தில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்கள் மன வேறுபாடின்றி கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 15 வார்டுகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக