Type Here to Get Search Results !

பாஜக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது, தேர்தல் பரப்புரைக்கான கடைசிநாள் இன்று என்பதால் பல்வேறு கட்சினரும், சுயேச்சை வேட்பாளர்களும், சூறாவளி பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர், தர்மபுரி மாவட்டம் பி.மல்லாபுரம் பேரூராட்சி வார்டு எண் 9-ல் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபிகிருஷ்ணா மற்றும் வார்டு எண் 7ல் மணிகண்டன் ஆகியோர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மக்களிடையே ஆளும் கட்சியின் குறைகளை எடுத்து கூறி பிரச்சாரம் மேற்கொண்டார், இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தலைவர்  புஷ்பராஜ்  மற்றும் பாஜக மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா தலைவர் சஞ்சீவி மற்றும்  அஜித்குமார், சரவணன், அரவிந்த் மற்றும்   கட்சி நிர்வாகிகள்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies