கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தோ்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, 4ம் வார்டில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளா் வெண்காடேசான், காமராஜ் நகர், சின்ன எலசகிரி, சந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி அவர்கள் தமிழகத்திற்கு செய்த தியாகங்கள் குறித்தும் அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர்கள் கொண்டு வந்த இந்திய மக்கள் வாழ்நாளில் மறக்க முடியாத திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து ,வெற்றி பெற செய்து 4ம் வார்டு பகுதியில் நீண்ட கால கோரிக்கைகளான சுத்தமான குடிநீர், சாலை, சாக்கடை, தெரு விளக்குகள் ,முதியோர் உதவி தொகை,குடும்ப அட்டை, சிறு மற்றும் பெரு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதி 4ஆம் வார்டு என்பதால் படித்த இளைஞர்கக்கு அவரவர் படித்த கல்விக்கு ஏற்றதுபோல தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும், அதற்கான மாதம் ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் ,உள்ளிட்ட தனது மாநகர மன்றஉறுப்பினர் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்துப் பணிகளையும் செய்து தருவதாக கூறி வாக்குகளை சேகரித்தார்.
அப்போது வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வெங்கடேஷ் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து ,ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர், சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதில், பாமகவை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனா்.
.gif)
