கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரப்பா என்பவரின் மகன் கிருஷ்ணன் (வயது 12), ஓசூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் ஆஞ்சியப்பன் (12), தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பட்டாபி நகரை சேர்ந்த சக்திவேல் (12) ஆகிய 3 சிறுவர்கள் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியாக விளங்கும் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு இந்த 3 சிறுவர்களும், காப்பகத்தில் உள்ள காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பி சென்றனர், இதுபற்றி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் ஆஞ்சியப்பன், கிருஷ்ணன் ஆகிய 2 சிறுவர்களையும் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு பகுதியில் தொப்பூர் போலீசார் மீட்டனர். இந்த 2 சிறுவர்களின் பெற்றோர்களும் திருச்செங்கோடு பகுதியில் வேலை பார்த்து வந்ததால், பெற்றோர்களை பார்க்க சென்றது தெரிய வந்தது.
இதேபோல் சிறுவன் சக்திவேலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 3 சிறுவர்களையும், தொப்பூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
