இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார், மருத்துவர் இராமதாஸ் மற்றும் அன்புமணி இராமதாஸ் அவர்களின் சாதனைகளையும், கொள்கைகளையும் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வலியுறுத்தி பேசினார்.
இந்நிகழ்வில் அனைத்து வார்டுகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சிறப்பு பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டனர். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மந்திரி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷன், எம். முருகன், முருகன், அன்புராஜா மற்றும் பாட்டாளி சமூக ஊடக பேரவையினை சார்ந்த அன்பு, சந்தோஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர், இறுதியில் பென்னாகரம் நகர தலைவர் ஜீவா அவர்கள் நன்றி கூறினார்
.gif)
