வருகின்ற பிப்ரவரி 19 ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையோட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை முடிந்த பின்னர் பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மசூதிக்கு பென்னாகரம் பேரூராட்சி 12 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் கபிலன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு கூடியிருந்த இஸ்லாமிய பெருமக்களிடம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கைப்பை சின்னத்திற்கு வாக்கு அளித்து தனக்கு ஆதரவு அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்தார்.
வாக்கு சேகரிப்பின் போது இவருடன் சட்ட உரிமை பாதுகாப்பு சங்க இணை செயலாளர் கனகராஜ், துணை செயலாளர் பி கே மாரியப்பன், பொருளாளர் அண்ணாதுரை, மற்றும் ஆதரவாளர்கள் குணபிரசாந்த், சின்னத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
.gif)
