இதில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியை கௌரவிக்கும் வகையில் ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தங்கராஜ் ரூபாய் 5000 பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இந்நிலையில் மாணவி செளபரணி தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் பெரிய வத்தலாபுரம் கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மக்கள் நூலகத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான பொதுஅறிவு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட புத்தகங்களை இன்று பெரிய வத்தலாபுரம் மக்கள் நூலகத்தில் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் செல்லமுத்து, சோளப்பாடி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கமலேசன், ஆர் ரகு பிரசாத், குணசேகரன், மக்கள் நூலகம் சார்பில் தாமரைச்செல்வன், இளையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)
