மாவட்டத்தில் 33 வார்டுகள் மற்றும் 10 பேரூராட்சி வேட்பாளர்களை செய்துவைத்து அவர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேர்தல் வாக்குறுதிகளாக தருமபுரி நகராட்சி மன்ற தலைவராக பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வந்தால் தருமபுரியில் உள்ள மதுக்கடைகளை மூடுவார்கள் என உறுதியளித்தார், மேலும் ஓகேனக்கல் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற கோரி எனது தலைமையில் போராட்ட நடைபெறும், இந்த போராட்டத்தால் தருமபுரி ஸ்தம்பிக்கும் நிலை வரும், அது தமிழகம் திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்கும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் செந்தில் மற்றும் பாரிமோகன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, வேலுசாமி, பாமக மாநில துணை தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், பாமக இளைஞரணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், ஊடக பேரவை நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் சார்ந்த முன்னோடிகள் பங்கேற்றனர்.
.gif)
