Type Here to Get Search Results !

தேர்தல் பார்வையாளர் வாக்கு எண்ணும் மையத்தில் நேரில் ஆய்வு.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி இஆப., அவர்கள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையம். மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தருமபுரி நகராட்சி வேட்பு மனுக்கள் பரிசீலனை உள்ளிட்டவற்றை இன்று (04.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து, தருமபுரி நகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருவதை தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, தருமபுரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. சித்ரா சுகுமார் உட்பட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies