Type Here to Get Search Results !

தருமபுரியில் பொதுமக்கள் பார்வைக்கு வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து, நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தமிழக வீரர்களின் நினைவை இக்கால தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வடிவமைக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காட்சிப்படுத்துவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 26.01.2022 அன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

அதன்படி இன்று 10.2.2022 மாலை 5.00 மணியளவில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சுதந்திர தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி, தருமபுரி, நல்லம்பள்ளி அருகே உள்ள லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்துள்ளது, அச்சமயம் மாவட்ட ஆட்சியர், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்.

மேலும் விடுதலைப் போரில் தமிழகம் என்பது பற்றி மாணவர்கள் உரையாற்றினார். அதில் தர்மபுரி மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிக் கல்லூரி மாணவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த அலங்கார ஊர்தி நாளை (11.02.2022) மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies