தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி, ஏலகிரி, ஜருகு, இலளிகம், போன்ற பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த வருடம் பருவமழை நன்கு பொழிந்ததினால் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் விளைச்சல் அதிகமாக கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக நல்லம்பள்ளி பகுதிகளில் கடும் பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சின்னவெங்காய பயிர்கள் பனிப் பொழிவின் காரணமாக பாதிக்கப்பட்டு சரவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் சின்ன வெங்காயம் மகசூல் குறையும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதனால் வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து, நோய்த் தாக்குதலில் இருந்து சின்ன வெங்காய பயிர்களை பாதுகாக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக