ஓசூர் அருகே பேய் பிடித்ததாக கோவில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர், ஓடும் இரயிலில் பாய்ந்து கை துண்டான பரிதாபம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சின்னபேட்டகாணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேலன்(20) என்னும் இளைஞருக்கு பேய் பிடித்ததாக சொல்லப்படுகிறது, இந்நிலையில் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றபோது பேய் பிடித்து மிரண்டு ஓடிய இளைஞன் ஓடும் இரயில் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது இரயிலின் முன் பாய்ந்த அந்த நபருக்கு இடதுக்கை துண்டான நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
.gif)

.jpeg)