இதில் ஓர் ஊர்தியான வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தருமபுரி மாவட்டத்திற்கு நாளை 10.02.2022 வியாழக்கிழமை அன்று வருகை தந்து, பொதுமக்களின் பார்வைக்காக தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகலஅள்ளி ஊராட்சி, தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாளை 10.02.2022 வியாழக்கிழமை அன்று மாலை தொடங்கி 11.02.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஊர்தியின் முகப்பில் வேலூர் கோட்டையில் 1805-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீர மங்கை வேலுநாச்சியார், வேலுநாச்சியாரின் போர் படையில் பெண்கள் படைக்கு தலைமை ஏற்று வெள்ளையர்களின் ஆயுத கிடங்கினை அழித்து தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி, வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததோடு ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து முதன் முதலில் தீரமாய் போரிட்டு தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக் கொண்ட விடுதலை போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்கம், அந்நிய படைகளை தனியாக சென்று அழித்த நெற்கட்டும் செவலை பிறப்பிடமாக கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவன், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்த மாவீரன் அழகு முத்துக்கோண், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய் போரிட்டு தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதர்கள் உருவாக்கிய காளையார் கோவில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படுவதோடு, பண்பாட்டுத்துறையின் சார்பில் வள்ளல் அதியமான் பம்பை கிராமியக் கலைகுழுவினரின் பம்பை, கைசிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தருமபுரி கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களின் விடுதலை போரில் தமிழகம் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் கருத்துரைகள், மற்றும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 10.02.2022 வியாழக்கிழமை அன்று மாலை தொடங்கி 11.02.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)
