தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 2021-2022ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அக்கமனஅள்ளி ஊராட்சி, பனந்தோப்பில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது பண்ணை குட்டை அமைக்கும் பணியினையும், கோடியூர் முதல் மூக்கனூர் மலையடி வரை ரூ.20.20 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் தூர் வாரும் பணியினையும், நாய்க்கனஅள்ளி ஊராட்சி, வெங்கட்டானூரில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது பண்ணை குட்டை அமைக்கும் பணியினையும், சின்னமல்லிப்பட்டியில் ரூ.1.86 இலட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரை ஓரம் மரக்கன்றுகள் நடும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கணேசன், திரு.தனபால் உதவிப்பொறியாளர்கள் திரு. துரைசாமி, திருமதி.சுமதி, ஒன்றியப்பொறியாளர் திருமதி. மலர்விழி உட்பட பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
.gif)
