இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன், இகாப., அவர்கள் முன்னிலை வகித்தார். ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது இக்கூட்டத்தில் மாவட்ட தெரிவித்ததாவது.
விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் கடந்த மாதம் 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
இந்த ஊர்திகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும் கொண்டு சென்று பொதுமக்கள் பார்த்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி 10.2.2022 அன்று மாலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியானது தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகல் அள்ளி ஊராட்சி, தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 10.02.2022 வியாழக்கிழமை முதல் 11.02.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட உள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் கண்டுகளிப்பதற்கு ஏதுவாக லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதை முன்னிட்டு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும், பாதுகாப்பு பணிகளையும் துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த அலங்கார ஊர்தியானது திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகின்ற 10.02.2022 வியாழக்கிழமை அன்று வருகை தரவுள்ளதையொட்டி தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர்தி சிரமமின்றி வருவதற்கும், தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 11.02.2022 அன்று தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கும் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை துறை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டு களிப்பதற்கு ஏதுவாக காட்சிப்படுத்தப்படவுள்ள லட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் மக்களை மகிழ்வூட்டும் வகையில் கலை பண்பாட்டு துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளையும், சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர்கள் குறித்த சிறப்பு கருத்துரைகளுக்கும் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை சிறப்பாக வரவேற்று பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்திட தேவையான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை துறை அலுவலர்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு . அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப., கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குநர் திரு.எழிலன், முதன்மை கல்வி அலுவலர் திரு.து. கணேஷ் மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ச.வினோத், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி. எஸ். வினோதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி. கௌரி, திருமதி.மு.ஷகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.அண்ணாதுரை உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)
