Type Here to Get Search Results !

சரக்கு லாரி மோதி விவசாயி பலி. லாரியின் கண்ணாடியை உடைத்து கிராம மக்கள் ஆவேசம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநிலம்  குட்லுநியனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமப்பா 55. இவர் இன்று மாலை வேப்பனபள்ளியை நோக்கி ஆந்திர மாநில எல்லை ஓ என் கொத்தூர் கிராமத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சரக்கு லாரி வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது தீடிரென்று எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில் ராமப்பா கை கால் முறிந்து இருசக்கர வாகனத்தில் இருத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து வாகன ஓட்டிகள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமப்பா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து ஆவேசமடைந்த கிராம மக்கள் அங்கு இருந்த சரக்கு லாரியை கண்ணாடியை உடைத்து ஆவேசமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆந்திரா மாநில குடிப்பள்ளி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies