Type Here to Get Search Results !

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது தென்னை விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்த தாவது:- விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தேங்காய்ப்பருப்பு விலை கிலோ ரூ.73.19/- முதல் ரூ.90.99/- வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105.90/-க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110.00/- க்கும், ஆறு மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

தேங்காய் கொப்பரை கொள் முதல் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 31.07.2022 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies