தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் செவ்வாய் கிழமைகளில் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது பண்டிகை காலங்கள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டதால் இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. இதன் காரணமாக அசைவ பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டாததால் விலை குறைந்து காணப்பட்டது. விலை குறைந்து காணப்படும் என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனைக்காக ஆடுகளை அதிக அளவில் கொண்டு வரவில்லை.
நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு இன்று குறைந்த அளவிலே ஆடுகள் விற்பனைக்கு வந்தன.மேலும் நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு இன்று வாரச்சந்தை பகுதிக்கு வந்திருந்தனர்.
.gif)

