தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், காவல் நிலையம் வரை சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேச கூடாது, சீட் பெல்ட் அணிந்துதான் 4 சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்,
தலைகவசம் உயிர் கவசம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.
இந்நிகழ்சியில் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
.gif)
