பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு.

தமிழ்நாடு அரசு நாட்டிற்காகப்‌ பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால்‌ நேரு, அண்ணல்‌ அம்பேத்கர்‌, தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ ஆகியோரின்‌ பிறந்த நாளன்று மாவட்ட அளவில்‌ கல்லூரி மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்குப்‌ பேச்சுப்‌ போட்டிகள்‌ நடத்திப்‌ பரிசு, பாராட்டுச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்ற அறிவிப்பு வெளியிட்டது.

இவ்வறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்ட தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ 2021- ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ திங்கள்‌ 2-ஆம்‌ நாள்‌ அண்ணல்‌ மகாத்மா காந்தியடிகளின்‌ பிறந்த நாளை முன்னிட்டும்‌, நவம்பர்‌ திங்கள்‌ 30ஆம்‌ நாள்‌ பண்டித ஜவஹர்லால்‌ நேரு அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்‌ போட்டி நடத்தப்பட்டது.

அண்ணல்‌ மகாத்மா காந்தியடிகளின்‌ பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில்‌ தருமபுரி மாவட்டம்‌, சின்னவத்தலாபுரம்‌ அரசு உயர்நிலைப்பள்ளியில்‌ பயின்று வரும்‌ 9-ஆம்‌ வகுப்பு மாணவி செல்வி. ர.செளபரணி மாவட்ட அளவில்‌ சிறப்பு பரிசு பெற்று ரூ.2,000/- ரொக்க பரிசு மற்றும்‌ பாராட்டு சான்றிதழையும்‌, பண்டித ஜவஹர்லால்‌ நேரு அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியிலும்‌ இதே மாணவி மாவட்ட அளவில்‌ சிறப்பு பரிசு பெற்று ரூ.2,000/- ரொக்க பரிசு மற்றும்‌ பாராட்டு சான்றிதழையும்‌ பெற்றார்‌.

இப்பேச்சுப்போட்டிகளில்‌ சிறப்பு பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம்‌, சின்னவத்தலாபுரம்‌ அரசு உயர்நிலைப்பள்ளியில்‌ பயின்று வரும்‌ 9-ஆம்‌ வகுப்பு மாணவி செல்வி.ர.செளபரணி தனது தந்தை திரு.ரமேஷ்‌ அவர்களுடன்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்களை இன்று (03.02.2022) நேரில்‌ சந்தித்து தான்‌ இப்பேச்சுப்போட்டிகளில்‌ சிறப்பு பரிசு பெற்ற ரொக்கம்‌ ரூ.40007-த்தினை மாவட்ட ஆட்சியரின்‌ சமூக பெறுப்பு நிதிக்கு வழங்கினார்‌. 

இந்நிதியினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள்‌ பெற்று உயர்ந்த இடத்திற்க்கு வரவேண்டும்‌ என அம்மாணவிக்கு தனது பாரட்டுகளையும்‌, வாழ்த்துகளையும்‌ தெரிவித்தார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.