Type Here to Get Search Results !

பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை திறக்க கோரிக்கை.

அரூர் பேருந்து நிலையத்தில் பயனற்று கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர் பேருந்து நிலையத்துக்கு சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் புற நகர் பேருந்துகள், அரூர் வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட நகர் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வந்துச் செல்கின்றன. இதனால், இந்த பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், அரூர் பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் குடிநீர் பயன்பாட்டுக்காக, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தில், 2017 - 18 ஆம் நிதியாண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் வழங்கும் நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. 

ஆனால், பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை பயணிகள் புகார் கூறுகின்றனர். இதனால், பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது. எனவே, அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை திறக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies