Type Here to Get Search Results !

ஈமச் சடங்கிற்காக வந்த நபர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பலி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பனங்கள்ளி கிராமத்தைச் சேர்ந்த அக்குமாரன் மகன் மாணிக்கம் 47  இவருக்கு திருமணமாகி சின்ன பொண்ணு என்ற மனைவியும் ரஞ்சித் குமார் 24 என்ற மகனும் ரஞ்சிதா 19 என்ற மகளும் உள்ளனர் இவர் அவருடைய சொந்த கிராமத்திலேயே இருசக்கர வாகனம் மெக்கானிக்கல் தொழில் செய்து வந்துள்ளார்.

அவருடைய மாமியார் இறந்து ஒன்பதாவது நாள் ஈமச் சடங்கு காரியம்  செய்வதற்காக ஒகேனக்கல் வந்தனர். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின்பு முதலைப்பண்ணை காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார். மாணிக்கம் ஆற்றில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு   படையினர் ஆற்றில் மூழ்கிய மாணிக்கத்தை சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின்பு மாணிக்கத்தை சடலமாக மீட்டனர் பின்னர்  இது தொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரி ஆற்றில்  மூழ்கி இறக்கும் சம்பவம் தொடர்ந்து வருவதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதியை ஒகேனக்கலில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies