அரசு பள்ளி.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறை கட்டிடம் மிகவும் பழுதான நிலையில் இருந்ததால் பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
இதனால் பள்ளியில் தகரம் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கொட்டகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெற்றோர் கோரிக்கை
இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், பழுதான கட்டிடம் இடிக்கப்பட்டதால் தகர கொட்டகை அமைத்து மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் குழந்தைகள்.
.gif)
