Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மேலாண்மை செய்முறை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பயிர்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக்கூட்டம் காணப்படும். தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும். தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே ‘குருத்து காய்தல்’ எனப்படுகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக்கதிர்களும் காய்ந்து விடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே ‘வெண்கதிர்’ எனப்படுகிறது. குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும்.

முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மில்லி வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடுதலை தவிர்க்க வேண்டும். நாற்று நடும்போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதால் தண்டு துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது. 

வேப்பங்கொட்டைச்சாறு தெளிப்பதன் மூலமும் தண்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம். அசார்டியாக்டின் 0.03 சதவீதம் எக்டேருக்கு 1,000 மில்லி அல்லது குளோரோடேரேனிலிபுருள் 18.5 எஸ்.சி. எக்டேருக்கு 50 மில்லி அல்லது புளுபென்டிமைட் 20 சதவீதம் டபிள்யூ.ஜி. எக்டேருக்கு 125 கிராம் ஆகிய ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இந்நிகழ்ச்சியில் அதியமான் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர். ஏழுமலை மற்றும் இறுதி ஆண்டு மாணவிகள்  கலந்து கொண்டு செய்முறையை  விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies