தருமபுறி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பினை கருத்தில் கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கு மொத்தம் 325.84 மி.க.அடி தண்ணீர் மற்றும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கு 10.02.2022 முதல் 65 நாட்களுக்கு வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து மொத்தம் 40517 ஏக்கர் பாசன நிலங்கள் பயணடையும் வகையிலும், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள் இந்நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் திரு.குமார் அளூர் வருவாய்க் கோட்டாட்சியர் திரு.முத்தையன், பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் திரு.சுப்பிரமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)
