Type Here to Get Search Results !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்‌.

தருமபுரி மாவட்டத்தில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ - 2022 தொடர்பாக தேர்தல்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ள 14 ஒன்றிய பார்வையாளர்கள்‌, 11 தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, 26 உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, 18 மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள்‌ தலைமையில்‌, தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ 7 தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை இயக்குநர்‌ டாக்டர்‌.ஆர்‌.பிருந்தா தேவி, ஆப, அவர்கள்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌கண்காணிப்பாளர்‌ திரு.கலைச்செல்வன்‌, இகாப., அவர்கள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ இன்று (09.02.2022) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ வாக்குச்‌ சாவடிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்‌, சிசிடிவி கேமரா, வாக்கு எண்ணும்‌ மையங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்து ஆய்வு செய்திடவும்‌, தங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நகர்ப்புற அமைப்புகளில்‌ தேர்தல்‌ நடத்தை விதிகள்‌, கோவிட்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ உள்ளிட்டவைகளை கண்காணித்திடவும்‌ ஒன்றிய பார்வையாளர்களுக்கு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ 7 மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப. அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

மேலும்‌ வாக்குச்‌ சாவடிகளுக்கு தேவையான பொருட்கள்‌ உள்ளதையும்‌, பூத்‌ சிலிப்‌ தேர்தல்‌ ஆணையம்‌ குறிப்பிட்டுள்ள தேதிகளில்‌ வாக்காளர்களுக்கு வினியோகம்‌ செய்வதை கண்காணிக்கவும்‌, தபால்‌ வாக்குகள்‌ உரியவர்களுக்கு படிவம்‌ வழங்குவதை கண்காணிக்கவும்‌, வாக்குச்‌ சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள்‌ வழங்குவதை கண்காணிக்கவும்‌, மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறப்படும்‌ புகார்களின்‌ மீது உடனுக்குடன்‌ தீர்வு காண்பதை கண்காணிக்கவும்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப. அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ கணினி மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌ மூன்றாவது ஒதுக்கீட்டில்‌ பணிகள்‌ தேர்தல்‌ ஆணையம்‌ குறிப்பிட்டுள்ள 10.02.2022 தேதியன்று முடித்திடவும்‌, வாக்குச்‌ சாவடிகளில்‌ மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள்‌, பதற்றமான வாக்குச்‌ சாவடிகளை கண்காணித்திடவும்‌ மண்டல அலுவலர்களுக்கு மாவட்டதேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப, அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ தருமபுரி நகராட்சி ஆணையாளர்‌ 7 தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி.சித்ரா சுகுமார்‌ மற்றும்‌ 1௦ பேரூராட்சிகளின்‌ செயல்‌ அலுவலர்கள்‌ 7 தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, ஒன்றிய பார்வையாளர்கள்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ உட்பட அரசுத்துறை அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies