தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. கைப்பந்து, கபடி, 100, 200மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளை நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் தொடங்கிவைத்தார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை மண்டல மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா வாழ்த்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிசிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர் பிறைசூடன், தகடூர் கல்வி நிறுவன இயக்குனர் லக்ஷ்மிபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விளையாட்டு போட்டிகள் நடத்த பிடமனேரி காமராஜர் இளைஞர் மன்ற நிர்வாகிகளுடன் நேரு யுவகேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் கபில்தேவ், முனியப்பன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடதக்கது ஆகும்.
.gif)
