Type Here to Get Search Results !

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்.

நல்லம்பள்ளி அருகே உள்ள வெத்தலாத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(வயது 32), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். 

நேற்று இரவு பணி முடிந்து சுமார் 8 மணிக்கு சேலம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குடிப்பட்டி மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது எதிரில் அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். 

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies