பென்னாகரம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெயக்கொடி பச்சையப்பன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பென்னாகரம் அம்பேத்கர் காலனியில் உள்ள மக்களின் முதன்மை தொழில் கூடை பின்னும் தொழில் இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கூடை பின்னும் தொழிலைத்தான் செய்து வருகின்றனர்.
தற்பொழுது வாக்கு அளிக்கும் நாள் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் விருவிருப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திமுக உறுப்பினர் ஜெயக்கொடி பச்சையப்பன் கூடை பின்னும் தொழிலாளிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியில் ஒரு கூடை பின்னும் தொழிலாளர்களிடம் ஒரு கூடையை வாங்கி அதை முழுமையாக பின்னி கொடுத்து அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
நான் வெற்றி பெற்றால் இந்த நலிவடைந்த கூடைகளை புனரமைத்து மீண்டும் சிறப்பாக செய்வதற்கு வழி வகை செய்வேன் மற்றும் 30 வருடங்களுக்கு மேலாக கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் பழுதாகி உள்ளது அதை சீரமைத்து தருவேன் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரித்தார்.
.gif)
