பள்ளியில் கடந்த ஒருவார காலங்களாக மிகவும் தரமற்ற வகையில் இருக்கும் பருப்புகளை பயன்படுத்தி பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவாகவும், ஊட்டச்சத்து உணவாகவும் வழங்கப்பட்டு உள்ளது இதில் இரண்டு மாணவர்கள் வயிற்றுவலி காரணமாக வீட்டுக்கு அனுப்பட்டதாக கூறப்படுகிறது.
பெற்றோர்கள், குழந்தைகளிடம் இது குறித்து கேட்டபோது பள்ளியில் சாப்பிட்ட பிறகுதான் வயிற்று வலி வந்தது கூறினார்கள்.
உடனடியாக பெற்றோர்கள் பள்ளி அணுகியபொழுது பள்ளியில் புழுத்துப்போன பருப்புகளும், அரசிகளும் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்கள் இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்குப் பொறுப்பான துறை அதிகாரி பாலக்கோடு ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது அவரிடம் சரியான முறையில் பதில் வராத காரணத்தினால் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகுவது என ஊர் மக்கள் முடிவு செய்துள்ளன.
.gif)
