அரூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அ.குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முறையாக பர்மிட் பெற்று இருக்க வேண்டும். ஓட்டுனர்கள், சீருடை மற்றும் தங்களது பெயர் தாங்கிய பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்.
அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் நிலைய எண்களை அச்சிட்டு ஆட்டோக்களின் உள்பகுதியில் பயணியர் பார்வையில்படும்படி வைத்திருக்க வேண்டும். அதிக பயணிகளை ஏற்றினால் அபராதம், உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தினார்.
.gif)
