தருமபுரி மாவட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள உணவகங்கள் / இறைச்சிக்கூடங்கள் / திருமண மண்டபங்கள் / மருந்தகங்கள் / மளிகை கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை மக்கும் / மக்காத குப்பைகளாகவும், அபாயகரமான குப்பைகளையும் தரம் பிரித்து தினசரி குப்பை சேகரிக்கும் தூய்மை காவலர்களிடம் வழங்குமாறும், குப்பைகளை கொடுக்காமல் பொது இடத்தில் கொட்டி வைத்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அபராதம் விதிக்கப்படும் என இதன் மூலம் தருமபுரி மாவட்ட அனைத்து வணிக நிறுவனதாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)
