அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 பிப்ரவரி, 2022

அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு.

தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் பிரசித்திபெற்ற ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு அடுத்தப்படியாக உள்ள 2-வது காலபைரவர் கோவிலாகும். இக்கோவிலுக்கு கர்நாடக மாநிலம் பெங் களூரு, மற்றும் ஒசூர், கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் கேரள மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று தட்சிணிகாசி கால பைரவர் கோவி லில் 18 வகையான பொருட்கள் மற்றும் வாசனை திரவங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து குபேர யாகம் மற்றும் 1008 லட்சார்ச்சனை நடை பெற்றது.அதனை தொடர்ந்து பகல் 11 மணிக்கு  பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்று சுவாமி விபூதி புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தருமபுரி மற்றும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாம்பல் பூசணி விளக்கு, தேங்காய் விளக்கு, அகல் விளக்கு, உள்ளிட்டவைகளில் விளக் கேற்றி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். அதற்குப் பின் பக்தர்கள் கோவிலை சுற்றி 18 முறை கிரிவலம் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad