வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 இலட்சம் நிதி உதவி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 இலட்சம் நிதி உதவி.

தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டம்‌, கம்மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர்‌ Sep. எஸ்‌.பூபதி அவர்கள்‌ ஜம்மு காஷ்மீர்‌, குப்புவாரா மாவட்டத்தில்‌ போர்‌ மற்றும்‌ போரையொத்த நடவடிக்கையின்‌ போது கடந்த 04.06.2021 அன்று வீரமரணம்‌ அடைந்தார்‌.

இதனை முன்னிட்டு, கார்கில்‌ நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.20,00,000/-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப, அவர்கள்‌ வீரமரணம்‌ அடைந்த இராணுவ வீரர்‌ Sep. எஸ்‌.பூபதி அவர்களின்‌ தாயார்‌ திருமதி.சித்ரா அவர்களிடம்‌ தருமபுரி, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ இன்று (04.02.2022) வழங்கினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல உதவி இயக்குநர்‌ திரு.எஸ்‌.வெங்கடேஷ்‌ குமார்‌ கலந்து கொண்டார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad