தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வைரவிழா மலர் வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை நூலகத்தில் நடைபெற்ற விழா மலர் வெளியீட்டு விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் வெ.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
ஐயப்பா கல்விநிறுவனங்கள் தாளாளர், கே. சதாசிவம் மலர் வெளியிட, மாவட்ட நூலக ஆய்வாளர் டி.மாதேஸ்வரி பெற்றுக்கொண்டார். வாசகர் வட்டப் பொருளாளர் கோ.மலர்வண்ணன், கே.ஏ.அரங்கநாதன், சேரலாதன், பச்சையப்பன், விநாயகமூர்த்தி, பொன்னம்பலம், அருள், ஸ்ரீமதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். து.முருகன், மலரும் உள்ளாட்சி ஆசிரியர் பொம்மிடி முருகேசன், கிரீன்பார்க் பள்ளி நிர்வாக அலுவலர் எம். ராஜா, அன்பு அறக்கட்டளை புவேந்தரசு, புலவர் நெடுமிடல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக நூலகர் சி.சரவணன் வரவேற்புரை வழங்கினார். முடிவில் பாவலர் கோ. மகாலிங்கம் நன்றி கூறினார்.