நல்லம்பள்ளி அருகே ‘கள்’ இறக்கிய 2 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நல்லம்பள்ளி அருகே ‘கள்’ இறக்கிய 2 பேர் கைது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இலளிகத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது45). இதேபோல் கொமத்தம் பட்டியை சேர்ந்தவர் ராமு(48). இவர்கள் இருவரும் பனை மரத்தில் அனுமதியில்லாத கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்ணன் லளிகத்திலும், ராமு கொமத்தம்பட்டி பகுதியிலும் கள்ளு இறக்கி விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad