Type Here to Get Search Results !

செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் காயம்.

கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து கோவைக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் (27) உடன் வந்தனர். தொப்பூர் கணவாய் 2-வது வளைவை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செங்கல் சாலையில் சிதறியது. விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies