இந்நிலையில் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றி திரிவதால் நோய் தொற்று அதிக அளவில் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது வெளியில் வர தடை விதிக்கப் பட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் முககவசம் கூட அணியாமல் செல்வது நோய்த்தொற்றை உருவாக்கும் எண்ணத்தில் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சூளகிரி போலீசாரால் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர், இதுபோன்று சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள உத்தனப்பள்ளி காவல் நிலையம் பேரிகை காவல் நிலையம் சூளகிரி காவல் நிலையம் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும் மாவட்டம் முழுவதிலும் விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ₹2,39,57,700 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.