கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட 5 இடத்தில் குழந்தைகளின் படிப்பிற்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கி கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒய்யல் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் குழந்தைகளின் கல்விக்காக மட்டும் 20 கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்தி வருகிறார்கள் அது மட்டும் இன்றி வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் கதை போட்டிகள் வைத்து பரிசுகளும் வழங்கப்படுகிறது அதுபோன்று மேற்படிப்பிற்காக கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நபர்களுக்கு அந்த கல்வி கட்டணத்தை செலுத்தி படிக்க வைத்து வருகின்றனர் 5 கிராமங்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன மேலும் உள்ள அனைத்து மாலை நேர வகுப்புகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.