Type Here to Get Search Results !

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வெற்றிலைக் காரனூர், பகுதியை சேர்ந்தவர் கோபால் விவசாயி  இவருடைய மகன் பரத் (25) இவர்  லாரியில் கட்டுமானங்களுக்கு  பயன்படுத்த படும் கலவை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று   அவரது  வீட்டில்   தீடீர்  என்று வீட்டில் யாரும் இல்லாத போது நைலான் கயிறு மூலம் மின்விசிறி யில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து  அங்கிருந்த  உறவினர்கள்  பாரூர்  வி.ஏ. ஒ அருண்  என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.  வி.ஏ.ஓ இதுகுறித்து  பாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார், அதன் பேரில் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி  உடற்கூறு  ஆய்வுக்காக போச்சம்பள்ளி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தீடீர்  என்று பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் காதல் தோல்வியா? அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் பாரூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies