முதல் காலகட்ட ஓவியங்களில் விலங்கு ஒன்றும், விலங்கு முகத்துடன் கிடைநிலையில் வரையப்பட்டுள்ள ஆண் உருவத்தையும் குறிப்பிடலாம், பாறையின் இடப்பக்கத்தில் மூன்று விலங்கின்மீது மனித உருவ ஓவியங்கள் உள்ளன.
இரண்டாம் கட்ட ஓவியங்களில் பாறையின் வலப்பக்கத்தில் கேடயம் தாங்கிய பெரிய மனித உருவமும் இரண்டு பக்கத்திலும் சிறிய மனித உருவங்களும் உள்ளன. வலப்பக்கத்தில் உள்ள உருவத்தின் தலைமீது அரைவட்டம் காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வேறு சில பாறை ஓவியங்களிலும் காணப்படுகின்றன. இவ்வோவியத்துக்கு மேல் வட இந்திய முத்திரைக் காசுகளில் காணப்படும் உஜ்ஜைனி குறியீடு வரையப்பட்டுள்ளது.
உஜ்ஜைனி குறியீடு என்பது ஒரு கூட்டல்குறியின் நான்கு முனைகளிலும் புள்ளியுடன் கூடிய சிறு வட்டங்களுன் இருப்பதாகும். இங்கு கூட்டல் குறியின் கீழ் மூன்று முனைகளை அரைவட்டமாய் இணத்து வரையப்பட்டுள்ளது. இக்குறியீடு தமிழகத்துக்கும் வட இந்தியாவுக்கும் இருந்த வணிக உறவை புலப்படுத்துகிறது.
அண்மையில் நாங்கள் இதே ஊரில் கண்டறிந்து வெளிப்படுத்திய 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த வணிகக்குழு கல்வெட்டையும் இங்கு ஒப்புநோக்கவேண்டியுள்ளது. சங்ககாலம் தொடங்கி சுமார் 1000 ஆண்டுகளாக இந்த ஊர் ஒரு முக்கிய வணிகத்தலமாக இருந்துளதையே இவ்விரண்டு கண்டுபிடுப்புக்களும் உணர்த்துகின்றன என்றார்.
இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.