கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் செயல்பாட்டில் இருந்த வங்கியில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பியுள்ளனர். பணத்தை நிரப்பிய வங்கி ஊழியர்கள் அசாதாரணமாக ஏடிஎம் இயந்திரத்தின் சாவியை ஏடிஎம் இயந்திரத்திலேயே விட்டுவிடுட சென்றுள்ளனர்.
இன்று காலை பணத்தை எடுப்பதற்காக பொது மக்கள் வந்து பார்த்தபோது இயந்திரத்தில் இருக்கின்ற சாவியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போச்சம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இயந்திரத்தில் இருந்த சாவியை பத்திரமாக மீட்டு அங்கு வந்த வங்கி ஊழியர் தில்சத்பேகத்தடம் சாவியை ஒப்படைத்தனர். சாவியை பயன்படுத்தி இரவில் பணம் ஏதாவது எடுக்கப்பட்டதா? என்பதை வங்கி ஊழியர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.