தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்பட்டு வருகிறது, சி.என்.அண்ணாதுரை. இவர் 1909 ஜனவரி 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். நாவல், கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் இன்று வரை பலராலும் வாசிக்கப்படுகிறது. தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு இதழாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளர்.
திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். இந்திய அரசியல் தளத்தில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்பதை முன்வைத்தவர்.
பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், 1969 பிப்ரவரி 3-ம் தேதி காலமானார், இந்நிலையில் அண்ணாவின் மறைவையெட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் அதிமுக சார்பில் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்ந நிகழ்ச்சியில் சூளகிரி அதிமுக கழக நிர்வாகிகளும் , தொண்டர்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக