Type Here to Get Search Results !

தடங்கம் அருகே பள்ளத்தில் கார் பாய்ந்து 3 பேர் படுகாயம்

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது தருமபுரி தடங்கம் மேம்பாலம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் எதிர்பராதவிதமாக பாய்ந்தது. இதில் காரில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கியவர்கள் சென்னையை சேர்ந்த கார் ஓட்டி வந்த மணிவண்ணன் (வயது35), கதிர்வேல் (65), மணிமேகலை(58) ஆகியோர் என்பதும், இவர்கள் நாமக்கல் குமாரபாளையத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies