தருமபுரி மாவட்டம், திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம், அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150- பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (14.02.2022) தொடங்கி வைத்து, அதில் அமைக்கப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மாரியதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் 5.9.1872 அன்று பிறந்து நமது நாட்டின் விடுதலைக்காகச் போராடிய தியாகச் செம்மல் ஆவார்.
வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரானார். அவர்கள் நன்றாகப் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்று ஒழுக்கம், வாய்மை, பிறர்நலம் பேணல் ஆகிய நற்குணங்களைப் பெற்று அவற்றை வாழ்வின் குறிக்கோள்காளாக கொண்டிருந்தார். இராமகிருஷ்ண மடத்துத் துறவிகளின் சந்திப்பு ஆன்மீகத் தேடலைக் கடந்து அவரது பார்வை அரசியல் பக்கம் திரும்பியது. அரசியலில் தனது குருவாக மதித்த திலகரின் கொள்கைகளைப் பின்பற்றினார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் வீழ்த்திட "சுதேசி நேவிகேஷன் கம்பெனி" என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்கி கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் புகழுக்கு சொந்தகாரர் ஆனார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு, இந்நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 01.11.2021 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து மாவட்டம் தோரும் பள்ளி மாணவ, மாணவியர்கள் சிதம்பரனார் அவர்களின் 150 பிறந்தநாளை போற்றும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து அறிந்துக்கொள்ளும் புகைப்படக் கண்காட்சி வகையில் நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம், அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம்,அரசு மேல்நிலைப்பள்ளி, நாயக்கன்கொட்டாய், அரசு உயர்நிலைப்பள்ளி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருமத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பைநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பைநல்லூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிர்கள் ஏராளமானோர் கப்பலோட்டிய தமிழன் உ.சிதம்பரனார் அவர்களின் 150- பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை நேரில் பார்வையிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றினை அறிந்து பயன்பெற்றனர்.
நாளைய (15.02.2022) தினம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோலைக்கொட்டாய், அரசு மேல் நிலைப் பள்ளி, பள்ளக்கொல்லை, அரசு உயர் நிலைப் பள்ளி, வெள்ளோலை, அரசு உயர் நிலைப் பள்ளி, மூக்கனஅள்ளி, அரசு உயர் நிலைப் பள்ளி, எம் ஒட்டப்பட்டி, அரசு உயர் நிலைப் பள்ளி, கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒடசல்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிர்கள் ஏராளமானோர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150- பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை நேரில் பார்வையிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றினை அறிந்துக்கொள்ளும் வகையில் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோலைக்கொட்டாய், அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் காட்சிபடுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ் மூர்த்தி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு. ராஜராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு மு. அண்ணாதுரை, கிருஷ்ணாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.
.gif)
