மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் சாதாரண தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான கடந்த 04.02.2022 அன்று வரை மொத்தம் 1094 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 05.02.2022 அன்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் ஆய்வில் 25 வேட்பு மனுக்கள் தகுதியற்றவை என் தள்ளுபடி செய்யப்பட்டு 1069 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, இதனை தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று (07.02.2022) தருமபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் வேட்பு 212 மனுக்களில் 36 வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டு 176 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், பேரூராட்சிகளை பொறுத்தமட்டில், 10 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 159 வார்டுகளில் 230 வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டும், 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும், 625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான சாதாரண தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த 1069 வேட்பு மனுக்களில் வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று (07.02.2022) 266 மனுக்கள் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டும், 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும், 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு எண். 5-ல் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த திருமதி.வி. ஹசினா (திமுக) அவர்களும், வார்டு எண். 11-ல் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த திருமதி.எம் ஆயிஷா (சுயேட்சை) அவர்களும் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர், என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

