கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கெயில் நிறுவத்தினர் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த விவசாயி கோவிந்தப்பா என்பவர் (58) பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஒபேபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தப்பா நேற்று முன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் கெயில் நிறுவனத்தினர் குழைய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் தவறி விழுத்ததில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்க்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸார் குழியில் இறந்த நிலையில் இருந்த கோவிந்தப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக