Type Here to Get Search Results !

தொப்பூரில் ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்பு.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு இரும்பு குழாய்கள் பாரம் ஏற்றிக்கொண்டு 16 டயர்களுடன் கூடிய டிரெய்லர் இணைக்கப்பட்ட ராட்சத லாரி ஒன்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை வந்தது. லாரியை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (30), விஜயவாடா பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் வெங்கட்டராமராஜுவ் (35) ஆகியோர் உடன் வந்தனர். 

தொப்பூர் கணவாயை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த இரும்பு குழாய்கள் சாலையில் சிதறி கிடந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் விபத்தில் சிக்கிய லாரி, சாலையில் சிதறி கிடந்த இரும்பு குழாய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies